புழல் சிறையில் விசாரணைக் கைதி வலிப்பு நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


சென்னையை அடுத்த புழல் சிறையில் வழிப்பறி வழக்கில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக்கைதி, வலிப்பு நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பட்டினப்பாக்கத்தை சேர்ந்த அக்பர் என்பவர், வழிப்பறி வழக்கில் விசாரணை கைதியாக புழல் மத்திய சிறையில் விசாரணை சிறை எண் 2-இல் அடைக்கப்பட்டிருந்தார். இன்று காலையில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறை மருத்துவர் அவரை பரிசோதித்த பின்பு, அக்பர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அக்பர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மற்றும் சக சிறைவாசிகளிடம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.