தோட்ட வேலை செய்துகொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்.


புழல் மத்திய சிறையில் தோட்ட வேலை செய்துகொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர், சிறைக்காவலர்களின் கண்ணுக்கு புலப்படாமல் மாயமாக மறைந்துள்ளதால், சிறை நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற கொலை வழக்கில், சின்னைய்யா என்ற ஜெயராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் 2009-ம் ஆண்டு முதல் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இவர் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் சக கைதிகளுடன் வேலை செய்துகொண்டிருந்தார். மாலை ஆறு மணிக்கு கைதிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றபோது, ஜெயராஜ் மாயமாகியிருந்தார்.
அவரை சிறை வளாகத்துக்குள் சல்லடை போட்டு தேடியும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு கெடுபிடிகள், சிசிடிவி கேமராக்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மிகுந்த புழல் சிறையில், ஆயுள் கைதி ஒருவர் தப்பிச் சென்ற நிகழ்வு, அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.