திமுக எம்எல்ஏக்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்.


அதிமுக ஆட்சியை கட்சியில் இருப்பவர்களே கலைத்து விடுவார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவமனை திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி மற்றும் சிவ மெய்யநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நிலையில், திமுக எம்.எல்.ஏக்களை கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியை யாரும் கலைக்க தேவையில்லை என்றும், தானாகவே ஆட்சி கலைந்து விடும் என்றும் அவர் கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.