புழல் சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி மீண்டும் கைது.


புழல் சிறையில் இருந்து, வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறை அதிகாரிகள் குடியிருப்பில் இருந்து தப்பிய ஆயுள் கைதி இன்று காலை பிடிபட்டார். சென்னையை அடுத்த புழல் சிறையின் பின்புறம், சிறை அதிகாரிகள் குடியிருப்பு அமைந்துள்ளது.
அங்கு சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன் வீட்டில் வேலைசெய்வதற்காக புழல் சிறையில் இருந்து 7 கைதிகளை அழைத்துச் சென்றுள்ளனர். அதில், 2008ஆம் ஆண்டில் வளசரவாக்கத்தில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சின்னையன் என்ற ஜெயராஜும் ஒருவர்.
சிறை அதிகாரிகள் குடியிருப்பின் சுற்றுச்சுவர் 6 அடி உயரம் மட்டுமே என்பதால், எளிதாக சுவரில் ஏறி சின்னையன் தப்பியுள்ளார். அவரை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை வளசரவாக்கத்தில் உள்ள தமது மனைவியை பார்ப்பதற்காக சின்னையன் பதுங்கி பதுங்கி வந்தபோது போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
சின்னையன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கு போன்றவற்றில் தண்டனை பெற்ற கைதிகளை அதிகாரிகள் வீட்டு வேலை செய்ய அழைத்துச் செல்லலாமா, அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.