குடியரசுத் தலைவர் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தேர்வு.


குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார். அவரை அனைத்துக் கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்குமாறு பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் அதனை மறுத்த எதிர்க்கட்சிகள் இன்றைய தினம் தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்போவதாக தெரிவித்திருந்தன. இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், லாலுபிரசாத் யாதவ், சரத்பவார், சீதாராம் எச்சூரி, உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சோனியாகாந்தி அறிவித்தார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், 17 கட்சிகளும் மீராகுமாரை ஏகமனதாகத் தேர்வு செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து அடுத்தமாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.