புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.


வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத்தளமாக சுண்ணாம்பாறு படகு இல்லம் திகழ்கிறது. இந்தப் படகு இல்லத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரம் படகில் பயணம் செய்தால், ஆறும், கடலும் இணையும் முகத்துவாரம் அருகே இயற்கையாக பாரடைஸ் பீச் அமைந்துள்ளது. தற்பொழுது இங்கு புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் விரைவுப் படகுகள், பெடல் படகுகள், எந்திரபடகுகள் என பல்வேறு வகையான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய ஜீப் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பெருமளவில் பாரடைஸ் பீச்சில் குவிந்தனர்.
அங்குள்ள படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிவேக கடலில் சுண்ணம்பாறு கலக்கும் இடம் வரை சென்று படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள், கடற்கரையில் உற்சாகக் குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.