ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத்தேர்வு.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் 75 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுச்சேரி கிளையில் 150 இடங்களும், காரைக்கால் கிளையில் 50 இடங்களும் என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த கல்வி ஆண்டிற்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் இன்று நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 75 நகரங்களில் 339 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் மட்டும் 6 மையங்களில் ஆயிரத்து 861 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்குலேட்டர்கள், மின்னணு சாதனங்கள் எதையும் மாணவர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.