அதிமுக அம்மா அணி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.


மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் செயல்பட்டுவரும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், புதுச்சேரி அரசு செயல்படுவதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அம்மா அணி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலையில் கூடிய சட்டப்பேரவையில், அதிமுக அம்மா அணி உறுப்பினர் அன்பழகன், நெடுஞ்சாலையோரம் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் எனக்கூறி, 42 மதுக்கடைகளுக்கு மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எவ்வாறு என கேள்வி எழுப்பினார்.
மேலும், நெடுஞ்சாலையான புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் மதுக்கடைகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனவும் குற்றம்சாட்டினார். அவர் பேசும்போது இடையே மைக் அணைக்கப்பட்டுள்ளது.
இதனால், சட்டமன்ற உறுப்பினர்களை புதுச்சேரி அரசு அவமானப்படுத்துவதாகவும், அவர்களுக்கு பேச்சுரிமை இல்லையா எனவும் கூறி, அதிமுக அம்மா அணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.