பிளஸ் 2: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவு இணையதளத்தில் வெளியீடுபிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தோரின் மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவு எண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் (ஜூன் 20) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இல்லாத பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களின் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.