சென்னையிலும் பிளாஸ்டிக் அரிசி உணவு?


சென்னை அயனாவரம் போக்குவரத்து பணிமணை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி உணவு பரிமாறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றும் விஜய் கூறுகையில், கேண்டீன் உணவு வழக்கத்துக்கு மாறாக இன்று மதியம் வித்தியாசமாக இருந்தது. கையில் சோற்றை அள்ளினால், கையில் ஒட்டாமல் ஒன்றுடன் ஒன்று ஒட்டி ரப்பர் பந்து போல மாறியது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம் என்றார். 
பிளாஸ்டிக் அரிசி புகாரைத் தொடர்ந்து அயனாவரம் போக்குவரத்து பணிமனை கேண்டீனில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக, பிளாஸ்டிக் அரிசி உணவு பரிமாறப்பட்டதாகக் கூறி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.