பிலிப்பைன்ஸ் கேசினோ விடுதியில் மர்ம நபர் தாக்குதல்: 36 பேர் பலி.


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள கேசினோ விடுதியில் துப்பாக்கி ஏந்திய நபர் தீ வைத்ததில் 36 பேர் பலியாகினர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், "பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலுள்ள கேசினோ விடுதியில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர் அங்குள்ள மேசைகளுக்கு தீ வைத்துள்ளார். இதனால் கேசினோ விடுதி தீப்பற்றிக்கொண்டு புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் அலறியடித்துக் கொண்டு கேசினோவிலிருந்த மக்கள் ஓடியுள்ளனர். புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் 36 பேர் பலியாகினர். கேசினோ விடுதியில் தாக்குதலை நடத்திய மர்மநபர் தற்கொலை செய்து கொண்டார்"
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தீவிரவாதத் தாக்குதல் அல்ல என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.