பழனியில் பேருந்துகள் மீது கல் வீச்சு, போலீசார் தடியடி.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ராமானுஜ ஜீயர் என்பவர், யாகம் ஒன்றில் பங்கேற்பதாக பழனி வழியாக பொள்ளாச்சிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பழனி புறவழிச் சாலையில் மினிவேன் ஒன்றில் 7 மாடுகள் ஏற்றிச் செல்லப்படுவதை கண்ட ராமானுஜ ஜீயர், அந்த வேனை தடுத்து நிறுத்தி, பழனி காவல்நிலையத்துக்கு கொண்டுசென்றார்.
இந்த தகவலை கேள்வியுற்ற எஸ்.டி.பி.ஐ. கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர், பழனி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ராமானுஜ ஜீயர் என்பவர் யார் எனவும், அவருக்கு வாகனத்தை பறிமுதல் செய்யும் அதிகாரம் அளித்தது யார் எனவும் போலீஸாரிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, ஜீயருக்கு ஆதரவாக பாஜக மற்றும் சிவசேனா தொண்டர்கள் பழனி காவல்நிலையத்தில் திரண்டனர். இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அறிந்த டி.எஸ்.பி வெங்கட்ராமன், மோதல் போக்கை கைவிட்டு இருதரப்பையும் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து காவல்நிலையத்தை விட்டு வெளியேறிய ராமானுஜ ஜீயரை நோக்கி, கற்கள் பறந்து வந்தன. அப்போது ஜீயரை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாஜக மற்றும் சிவசேனா தொண்டர்கள் மூவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர்.
அவ்வழியாக சென்ற வாகனங்கள் மீதும் கல்வீசப்பட்டது. அப்பகுதி கலவர பூமியாவதை கண்ட போலீஸார், தடியடி நடத்தி இருதரப்பையும் விரட்டியடித்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.