200 அடி பள்ளத்தில் விழுந்த பெண் யானை உயிரிழந்தது.


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 200 அடி பள்ளத்தில் விழுந்த பெண் யானை ஒன்று உயிரிழந்தது.
பரலியாறு, மரப்பாலம் போன்ற பகுதிகளில் பலாப்பழசீசன் தொடங்கியுள்ளதால், கடந்த சில நாட்களாக இரண்டு குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் குன்னூர் பரலியாறு பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் சேராத 16 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கோழிக்கறை பகுதியில் பாறைகள் மீது நடந்தபோது கால் இடறி 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலே கொண்டுவர முடியாததால், யானையை வனத்துறையினர் அங்கேயே எரியூட்டினர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.