ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீத்தேன் எடுக்க முயல்வதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு.


கும்பகோணம் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீத்தேன் எடுப்பதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்ததைக் கண்டித்து, வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கதிராமங்கலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் திடீரென்று பல கண்டெய்னர்கள் இறக்கப்பட்டு, உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், புதிய குழாய்களை அமைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீத்தேன் எரிவாயு எடுக்கமுயல்வதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் சிலரை போலீஸார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து அப்பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க 2-வது நாளாக இன்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.