மேட்டூர் அணையிலிருந்து 6-வது ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.


சேலம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், 6-வது ஆண்டாக அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை மூலம் சேலம் உட்பட 12 மாவட்டங்களில் உள்ள 16 புள்ளி பூஜ்ஜியம் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு, ஜூன் 12 முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 330 டி.எம்.சி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்படும்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வரும் 12-ஆம்தேதி, டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 935 கனஅடியாகவும், அணையின் நீர்மட்டம் 24 புள்ளி ஒன்று மூன்று அடியாகவும், நீர் இருப்பு 5 புள்ளி 38 டிஎம்சியாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவமழை இனி பெய்தாலும், கர்நாடக அணைகள் நிரம்பினால் மட்டுமே, அங்கிருந்து தமிழகத்திற்கு உபரிநீர் திறக்கப்படும். ஆனால், ஒருவார காலத்திற்குள் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.