நீட் தேர்வு எழுதிய மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு.


தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீடு போக உள்ள மீதமுள்ள மருத்துவ இடங்களில் 85 சதவீதம், நீட் தேர்வு எழுதிய மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகவும், இதுதொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றார்.
மாநில அரசுக்கு உள்ள மொத்த இடங்களில் 15 சதவீதம் வழக்கம்போல அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்களில், மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவீதமும் வழங்கும் வகையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நீட் தேர்வின் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அவர் விளக்கமளித்தார். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் என்றும், ஜூலை 17ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.