அஸ்ஸாம் மற்றும் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


மும்பையில் பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மும்பையின் ஒரு சில இடங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாததால், வீடுகளும், கடைகளும் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன.

அசாமில் தொடரும் கனமழையால் 150 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. லக்மிபூர், கரீம்கஞ், மற்றும் சோனிட்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதுடன், 500 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் நீரில் மூழ்கின.
வெள்ளத்தால் 87 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளத்திற்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ள நிலையில், வெள்ள நிலைமை மோசமாகி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.