பசு பக்தி என்ற பெயரில் படுகொலைகள் நடப்பது ஏற்கத்தக்கதல்ல: பிரதமர் மோடி


பசு பக்தி என்ற பெயரில் படுகொலைகள் நடப்பது ஏற்கத்தக்கதல்ல என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாக இருந்ததில்லை.

இன்று நடைபெறும் சில விரும்பத்தகாத சம்பவம் தொடர்பாக எனது வேதனையைத் தெரிவிப்பதோடு அது தொடர்பாக சில வார்த்தைகளையும் கூற விரும்புகிறேன்.

பசு பக்தி என்ற பெயரில் யாரையும் படுகொலை செய்வது ஏற்கத்தக்கதல்ல. மகாத்மா காந்தியும், வினோபா பவேவும் பசு பாதுகாப்பு குறித்து பேசியளவுக்கு வேறு யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.
ஆனால், இன்று பசு பக்தி என்ற பெயரில் படுகொலைகள் நடப்பதை மகாத்மா காந்தியே ஏற்க மாட்டார்.

இத்தேசத்தில் யாருக்கும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் அதிகாரம் இல்லை. வன்முறை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாக இருந்ததில்லை இனியும் இருக்கப்போவதில்லை.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மகாத்மா காந்தி கண்ட கனவு இந்தியாவை நனவாக்குவோம். நமது தேச விடுதலைக்காக போராடியவர்கள் பெருமை கொள்ளும் வகையில் நமது தேசத்தை வளர்த்தெடுப்போம். நமது தேசம் அகிம்சைக்கு பெயர் பெற்றது.

2017-ம் ஆண்டு, சம்பாரண் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு என்பதோடு சபர்மதி ஆசிரமம் நிறுவப்பெற்றதன் நூற்றாண்டும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.