அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன்


அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் சேர்க்கப்படவேண்டும் என்ற உத்தரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், சிவில்சர்வீசஸ் தேர்வுகள் மூலம் சிறந்த கல்வியாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அரசு பள்ளிகளில் படித்த நிலையில், அனைவரும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறையில் 40க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வரும் 15-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகளின் போது அறிவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.