தமிழகத்தில் 187 தரம் குறைந்த பால் மாதிரிகள் கண்டறியப்பட்டன – தமிழக அரசு.


தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 187 தரங்குறைந்த தனியார் பால் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதாகவும், இது தொடர்பாக பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருந்தார்.
இதையடுத்து, கலப்பட பாலை தடுக்கவும், அவற்றை தடை செய்யவும் உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியநாராயணா உள்ளிட்ட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். பல்வேறு தனியார் பால் நிறுவனங்களின் ஆலைகள் வெளிமாநிலங்களில் செயல்படுவதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 886 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னையில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதில் 187 தனியார் பால் மாதிரிகள் தரங்குறைந்தவை என கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பாக 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கலப்பட பால் விற்பனையை தடுக்க, தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரம், பால்வளம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் அடங்கிய 16 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. மாவட்ட அளவிலும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் 338 பால் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதில், 135 மாதிரிகள் தரங்குறைந்தவை எனவும், அது தொடர்பாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.