பால் கலப்படத்தை கண்டறிய மாவட்ட வாரியாக ஆய்வுகள் – உணவு பாதுகாப்புத்துறை.


பாலில் கலப்படத்தை கண்டறியும் நடமாடும் இயந்திரம் மூலம் மாவட்டவாரியாக ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. பாலில் கலப்படம் உள்ளதா என கண்டறிய தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
பாலில் கலப்படம் உள்ளதாக சமீபகாலமாக வெளியாகும் செய்திகளால், மக்கள் அதிக அளவில் தங்கள் வாங்கும் பால் மாதிரிகளை பரிசோதித்தனர். பிற மாவட்டங்களிலும் பாலை பரிசோதிக்க இயந்திரங்கள் தேவை என ஆட்சியர்கள் கோரியுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, வாரம் ஒரு மாவட்டத்தில் மக்கள் தாங்கள் வாங்கும் பாலை பரிசோதிக்க அட்டவணை ஒன்றை உணவு பாதுகாப்பு துறை தயாரிக்க உள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து பரிசோதனை இயந்திரம் ஒன்றை தமிழக அரசு வாங்கியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.