நீட் தேர்வு மூலம் மருத்துவ இடங்களை பெற்றவர்கள் எத்தனை பேர்? -அறிக்கை தாக்கல் உத்தரவு.


சி.பி.எஸ்.இ மற்றும் மாநில பாடத்திட்டத்தில் பயின்று நீட் தேர்வு மூலம் மருத்துவ இடங்களை பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2010ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்களுடன், ப்ளஸ் டூ மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
சி.பி.எஸ்.இ மற்றும் மாநில பாடத்திட்டத்தில் பயின்று நீட் தேர்வு மூலம் மருத்துவ இடங்களை பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும், சி.பி.எஸ்.இ.க்கும் அவர்கள் உத்தரவிட்டனர்.
நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டம் உள்ள நிலையில், நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தின் கீழ் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் பிளஸ்டூ தேர்வு முடிந்த உடனேயே நீட் தேர்வை நடத்தாமல் தாமதமாக நடத்தியது ஏன் ? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் எழுப்பிய நீதிபதிகள், அவற்றுக்கு பதிலளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், சி.பி.எஸ்.இ.க்கும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.