வேந்தர் மூவிஸ் மதனின் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.


சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் வேந்தர் மூவிஸ் மதனின் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் கைதாகி ஜாமினில் வெளிவந்த மதனை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.
மருத்துவ படிப்பிற்கான இடம் வாங்கி தருவதற்கு 91 கோடி ரூபாய் வசூலித்தாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், மதனின்6 கோடியே 35 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் வடபழனி, சாலிகிராமம் மற்றும் கேரளா மாநிலம் இரவிபுரம் ஆகிய இடங்களில் மதனுக்கு சொந்தமான நிலங்கள் முடக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.