பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் பலி.


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் பலியாயினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற அரசு பேருந்து கள்ளபிரான்புரம் அருகே பழுதாகி நின்றுகொண்டிருந்தது. மாற்றுப் பேருந்திற்காக பயணிகள் பேருந்தின் உள்ளே காத்திருந்தனர். அப்போது திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அரசுப் பேருந்தின் பின்புறமாக அதிவேகமாக மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 8 பேர் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தோர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லலிதாமேரி என்ற பெண் பலியானார். இதனால் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். லாரியின் ஓட்டுனர் அதிவேகமாக லாரியை இயக்கியதே, விபத்துக்குக் காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.