லண்டன் தீவிரவாத தாக்குதல் குறித்து உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பிரிட்டன் தலைநகர் லண்டனில் சனிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியானதற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லண்டன் மேம்பாலத்தில் சனிக்கிழமை இரவு தாறுமாறாக ஓடிய வெள்ளை நிற வேன் ஒன்று அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. பின்னர் அந்த வேன் பாரோ சந்தைப்பகுதிக்கு செலுத்தப்பட்டது. அங்குள்ள பாரோ சந்தைப் பகுதியில் உணவு விடுதிகள், பார்கள் அதிகம் இருப்பதால் அங்கு எப்போதுமே மக்கள் கூட்டம் இருக்கும். பரபரப்பான அந்தப் பகுதியில் வேனை நிறுத்திய தீவிரவாதிகள் அதிலிருந்து இறங்கி அப்பகுதியில் வந்தவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். இந்த இரு சம்பவங்களில் 6 பலியானார்.
போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் மூவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டனில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
"எந்த சூழ்நிலையிலும் அமெரிக்கா லண்டனுக்கு உதவ தயராக இருக்கிறது. அமெரிக்கா லண்டனுக்கு துணையாக இருக்கும். கடவுள் ஆசீர்வதிப்பார்"
இந்திய பிரதமர் மோடி
"லண்டனில் நடந்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியையும், மனக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது பிரார்த்தனைகள் உடனிருக்கும்"
பிரான்ஸ் அதிபர் மக்ரோன்
"புதிய தாக்குதலால், பிரிட்டனுடனான பிரான்ஸின் நெருக்கம் அதிகமாகியுள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய பிரார்த்தனை உடனிருக்கும்"
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ
"இது ஒரு துயரமான தாக்குதல், நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்"
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்
"லண்டன் அதிர்ச்சிகரமான தீவிரவாதத் தாக்குதலை சந்தித்து வருகிறது. லண்டன் மக்களுக்கு எனது பிரார்த்தனைகள் உடனிருக்கும்"
நியூசிலாந்து பிரதமர் பில்
"தீவிரவாதத் தாக்குதலால் அப்பாவிமக்கள் பலியாகின்றனர். லண்டன் மக்களுக்கு நியூசிலாந்தின் பிரார்த்தனைகள் உடனிருக்கும்"
லண்டனின் மான்செஸ்டர் நகரில் கடந்த வாரம் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.