கலங்கரை விளக்கம் அருகே வழக்கறிஞர் வெட்டப்பட்ட வழக்கு.


சென்னை கலங்கரை விளக்கம் அருகே வழக்கறிஞர் வெட்டப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கேசவன் கடந்த 19ஆம் தேதி கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டார். தலை மற்றும் கழுத்தில் வெட்டுக்காயமடைந்த வழக்கறிஞர் கேசவன், உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த வந்த நிலையில், வழக்கறிஞர் கேசவனை வெட்டிய கும்பலின் தலைவன் வினோத்குமார் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். இதையடுத்து, தப்பியோடிய 4 பேர் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த அருணகிரி, அஜீத், சந்தீப், தினேஷ் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.