குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்.


குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் அங்கு சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
குற்றாலமத்தில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. நேற்று காலையிலும் பொதிகை மலைப்பகுதி, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இதனால் குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து இருந்தது. ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுந்தது.
இதனால் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களை கட்டுகிறது. சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை என்பதால் தொடர்ச்சியாக அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.