பணி விலக்கு சான்றிதழ் வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலர் கைது.


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே, ஆசிரியர் பணியிட மாற்றம் வழங்க, 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்கக்கல்வி கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
சின்ன பொம்மரசனபள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் பாலகிருஷ்ணனுக்கு, பால்னபள்ளி கிராமத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு, அவர் பணியாற்றும் பள்ளியில் இருந்து பணி விலக்கு அளிக்கப்பட்ட பிறகே, புதிய இடத்தில் பணியாற்ற முடியும்.
இந்நிலையில்,பாலகிருஷ்ணனுக்கு பணி விலக்கு சான்று அளிக்க, வேப்பனப்பள்ளி உதவி தொடக்ககல்வி கண்காணிப்பாளர் பிரகாஷ், 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்த பாலகிருஷ்ணன், அவர்கள் அளித்த யோசனைப்படி ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரகாஷிடம் கொடுத்தார்.
இதை மறைந்து நின்று கவனித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பிரகாஷை கையும் களவுமாக கைது செய்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.