சென்னையில் ஓடும் சொகுசு பேருந்தில் பயணிகளாக நடித்து 5 பேர் கத்தி முனையில் கொள்ளை முயற்சி.


சென்னையில் ஓடும் சொகுசு பேருந்தில் கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை அரும்பாக்கத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு 11 முப்பது மணிக்கு கேபிஎன் தனியார் நிறுவனத்தின் சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இப்பேருந்தை மதுரை வடக்கரையை சேர்ந்த ஓட்டுனர் போத்திராஜ் என்பவர் ஓட்டிச்சென்றார். அரும்பாக்கம் பணிமனையில் இருந்து பேருந்து வெளியே வந்த உடனேயே, டிப்டாப் உடையணிந்த 5 பேர் கோவை செல்லவேண்டும் என கூறி பேருந்தில் ஏறினர்.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதில் ஒருவன் ஓட்டுனரின் மீது கத்தியை வைத்து வேகமாக பேருந்தை இயக்கும்படி கூற, மற்ற 4 பேரும் பயணிகளின் உடமைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். பயணிகள் கத்தி கூச்சல் போட்டதால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி கீழே இறங்கி தப்பிச்சென்றனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் கொள்ளையரில் தினேஷ் என்பவரை துரத்தி பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் வந்த கொள்ளையரில் கணேஷ் என்பவரை மட்டுமே தனக்கு தெரியும் என்றும், மற்ற 3 பேரையும் தெரியாது என்றும் கூறினார். ஓட்டுனர் போத்திராஜ் அளித்த புகாரை அடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை அரும்பாக்கம் போலீசார் தொடர்ந்து மற்ற கொள்யையர்களை தேடி வருகின்றனர்.
பேருந்தை கொள்ளையர்கள் அடித்து நொறுக்கியதில் 2 லட்சம் ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.