கோவை அருகே காட்டு யானை தாக்கி 4 பேர் பலி.


கோவை போத்தனூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் வீட்டைவிட்டு வெளியே வந்த விஜயகுமார் என்பரையும் அவரது 12 வயது மகள் காயத்ரியையும் யானை தாக்கியது. இதில் யானையால் மிதிக்கப்பட்ட காயத்ரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகளைக் காப்பாற்றச்சென்ற விஜயகுமாரையும் யானை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ஓடிய யானை வெள்ளலூர் ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ஜோதி, நாகரத்தினம் என்ற இரு பெண்களை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அங்கிருந்து தொடர்ந்து சென்ற யானை மேலும் மூவரை தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் வனப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்த யானையைக் காண மக்கள் கூடினர். அப்போது ஆர்வமிகுதியால் காட்டுப் பகுதிக்குள் இறங்கிய பழனிச்சாமி என்பவரை (மறைவிடத்தில் இருந்து வெளிவந்து) யானை திடீரென தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் கோவைப்புதூர் வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் வெளியில் வந்த இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மதுக்கரை குறும்பப்பாளையத்தில் இந்த யானை கடை ஒன்றையும் உடைத்து சேதப்படுத்தியதாகவும் இரண்டு நாட்களாக இந்த யானை இப்பகுதியில் அதிக ஆக்ரோஷத்தோடு சுற்றி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து வெள்ளலூர் பகுதிமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.