கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்.


தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். சாத்தனூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் 4 அரசு மணல் குவாரிகள் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் தொடர் எதிர்ப்புகளை தெரிவித்தும், பணிகள் வழக்கம் போல், நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்க, 8 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வித்தலபுரம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மூலமாகவே விவசாயப் பணிகள் நடைபெறுவதாக கூறிய அவர்கள், மணல் குவாரிகள் அமைந்தால், விவசாயம் பாதித்து, வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.