கடனை திருப்பி கேட்ட இளைஞரை கொன்று புதைத்த கும்பல்.


திருச்சியில் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சுண்ணாப்புக்காரப் பட்டியில் சிமென்ட் கடை நடத்திவந்தவர் வினோத். கடந்த மாதம் 9 ஆம் தேதி முதல் இவரை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இனாம்குளத்தூர் பகுதியில் நடந்த ஒரு கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, திருச்சி முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயகாந்தன் உட்பட 4 பேர் சேர்ந்து வினோத்தை கொலை செய்து உய்யகொண்டான் ஆற்றில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவர் தலைமையில் வினோத்தின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. 
விசாரணையில், வினோத்திடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார் ஜெயகாந்தன். இதில் 9 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டார். மீதித் தொகையை கேட்டு வினோத் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் கோபமான ஜெயகாந்தன் சோமரசம்பேட்டை உய்யக்கொண்டான் ஆற்றுப்பாலம் அருகே அவரை வரவழைத்து, பாலத்தில் இருந்து தள்ளிவிட்டார். இதில் வினோத்தின் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து ஆற்றில் மண் தோண்டி புதைத்ததாக ஜெயகாந்தன் வாக்குமூலம் அளித்துள்ளார். 
கடனை திருப்பிக்கேட்ட இளைஞரை கொன்று புதைத்த இந்தக் கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.