கவிஞரும் பேராசிரியருமான அப்துல் ரகுமான் காலமானார்.


கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 80. வானம்பாடி கவிதை இயக்கம் மூலமாக புகழ் பெற்ற கவிஞரும் பேராசிரியருமான அப்துல் ரகுமான் பால்வீதி போன்ற தமது கவிதைத் தொகுப்புகளாலும் கட்டுரைகளாலும் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர். ஆலாபனை தொகுப்புக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவரை சினிமாவுக்கு பாட்டெழுத இசைஞானி இளையராஜா போன்றவர்கள் அழைத்த போது, அம்மி குத்த சிற்பி எதற்கு என கவிதையாலேயே மறுத்தவர் அப்துல் ரகுமான். 
திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமாக பழகி வந்தார். வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் 29 ஆண்டுகள் பேராசிரியராகவும் தமிழ்த்துறை தலைவராகவும் அவர் பணியாற்றினார். திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு வக்பு வாரியத்திலும் அவர் தலைவர் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த ஒருமாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்துல் ரகுமான் இன்று அதிகாலை காலமானார். அஞ்சலிக்காக அவரது உடல் பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.