அரசியலில் பல சாதனைகளை படைத்தவர் கருணாநிதி என தலைவர்கள் புகழாரம்.


சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைரவிழாவில் தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு, கருணாநிதியை வாழ்த்திப் பேசினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தமிழக சட்டப்பேரவை போன்று வடிவமைக்கப்பட்டிருந்த மேடையில் விழா நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற விழாவை, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, சுதாகர் ரெட்டி, டி-ராஜா, எம்.பி. டெரிக் ஓ பிரயன், மஜீத் மேமன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், 14 வது வயதிலேயே சமூக பணியில் ஈடுபட்டு, தமிழ் எழுத்துக்கள் மூலம் மக்கள் மனதில் நின்றவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட கருணாநிதி, 5 முறை முதலமைச்சர், 60 ஆண்டு சட்டமன்ற அனுபவம் என அவரின் சரித்திரத்தை யாரும் முறியடிக்க முடியாத அளவு சாதனை படைத்ததாகக் கூறினார். திமுக அளித்த வாக்குறுதிப்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருந்தால், பீகாரைப்போல் தமிழகத்திலும் குற்றங்கள், விபத்துக்கள் குறைந்திருக்கும் என்றார்.
இதையடுத்து உரையாற்றிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் கருணாநிதியைப் போல் தொடர்ந்து 14 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர்கள் உலகத்திலேயே இல்லை என்றார். இதற்காக கின்னஸ் சாதனை, பாரத ரத்னா விருதுகள் வழங்கி அவரை கெளரவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
விழாவில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தமிழக மக்களால் அதிகம் நேசிக்கப்படுபவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். கருணாநிதியின் பேச்சுக்கள் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக அமையும் என்றும், மக்களை நேசிப்பதால்தான் அவரால் தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற முடிகிறது என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
விழாவில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, தோல்வி இல்லாமல் வெற்றி கண்டவர் கருணாநிதி என்றும், 19 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் பிரதமர்களை நிர்ணயிக்கக் கூடியவராகவும், தேசிய அரசியலை நிர்ணயிக்கக் கூடியவராகவும் கருணாநிதி திகழ்ந்தார் என்று ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.