நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்.


கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது.
சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் விமர்சித்தார். தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகளுக்கு சிறைத்தண்டனை விதித்து அவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் நீதிமன்றத்தை அவமதித்ததாக உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. கர்ணனை கைது செய்ய கொல்கத்தாவில் இருந்து வந்த கொல்கத்தா போலீஸ் படையினர் சென்னையில் முகாமிட்ட போதும் கர்ணனை கைது செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு, 4ஆவது முறையாக நீதிபதி கர்ணன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை உச்சநீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.