ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான கலந்தாய்வின் இரண்டாம் நாளான இன்று, இடஒதுக்கீட்டு பிரிவினர் பங்கேற்றனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மொத்தமாக 200 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்காக கடந்த 4ந்தேதி அகில இந்திய அளவில் ஆன்லைன் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் நேற்று பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கலாந்தாய்வின் இரண்டாவது நாளான இன்று 75 இடங்களுக்கான, ஓ.பி.சி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள 750 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் சான்றிதழ்கள் , கை ரேகை ஆகியவை சரிபார்க்கப்பட்டு , கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.