திருவாரூரில் ஐபோன் வெடித்து இளைஞர் காயம்.


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சச்சின் என்ற 23 வயது இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் திருவாரூர் அருகே புள்ளமங்களம் எனும் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
முகந்தனூர் எனுமிடத்தில் சச்சினுக்கு தனது ஐஃபோனில் அழைப்பு வந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தை நிறுத்தி அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருக்கும்போதே ஐஃபோன் சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு முகத்தாடையில் படுகாயம் ஏற்பட்டது. ஐபோன் வெடித்த அதிர்ச்சியில் சச்சின் கீழே விழுந்ததில் அவரது கையிலும் படுகாயம் ஏற்பட்டது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், சச்சினை மீட்டு விளமல் பகுதியிலுள்ள நவஜீவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காவல் துறையினர் விசாரணையில் வெடித்து சிதறிய ஐஃபோன் 7 மாடல் என்பது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் ஐஃபோன் 7 ப்ளஸ் மாடல் வெடித்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஐஃபோன் 7 மாடலும் வெடித்து சிதறியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.