புதிய 500 ரூபாயை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு.


புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதையடுத்து புதிதாக 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் மாற்றம் செய்து புதிய 500 தாள்களை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
அதன்படி மகாத்மா காந்தியின் படத்தில் சிறிய அளவு மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் 500 என்று குறிப்பிடப்படும் ஏதேனும் ஓரிடத்தில் ஆங்கிலத்தில் ஏ என்று குறிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின் புதிய ஒரு ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.