எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.


ஜம்மு காஷ்மீரின் இரண்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "ஜம்மு காஷ்மீரில் ராஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளிலுள்ள இந்திய நிலைகளின் மீது இன்று பாகிஸ்தான் ராணுவம் காலை 7.30 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் வலுவான பதிலடி கொடுக்கப்பட்டது" என்றார்.
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே 15 மற்றும் 16-ம் தேதிகளில் ராஜோரி மாவட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெர்விக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மாதத்தின் முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ல் மட்டும் எல்லையில் 449 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்குதியில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.