நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், ஆதார் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் விசா எடுக்காமல், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, அந்நாடுகளுக்கு சென்று வரலாம்.
இந்நிலையில், தனிநபர் அடையாள ஆவணமாக வழங்கப்படும் ஆதார் கார்டை, நேபாளம் மற்றும் பூடானுக்கு செல்லும் இந்தியர்கள் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை என்பது அரசின் மானியங்களை பெறவும், மக்கள் நலத்திட்டங்களை அடையவும்தான் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கருத்துரையிடுக