இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 பேர் பலி.


இருநாட்டு எல்லைப் பாதுகாப்புப்படையினரின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வரிசையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகாட்டி, நவ்ஷேரா, ரஜவுரி உள்ளிட்ட பகுதிகளில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி முழுவதும் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிகளாலும் பீரங்கிகளாலும் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில் தொழிலாளி ஒருவர் இன்று உயிரிழந்தார். மேலும் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இந்தியத் துணைத்தூதர் ஜே.பி.சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.