திண்டுக்கல் அருகே மளிகை கடையில் 24 மணி நேரமும் மதுவிற்பனை.


திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் சாலையில் மளிகை கடையில் நடைபெறும் மதுவிற்பனையை போலீசார் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆங்காங்கே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உத்தனம்பட்டி பிரிவில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு அருகே உள்ள மளிகை கடையில் அதிகாலை 5 மணியிலிருந்தே மது விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் மளிகை கடையின் பின்புறம் ஒரு மதுக்கூடமே சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. இதனால் காலையில் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் மதுகுடித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் தகராறில் ஈடுபடுவதாகவும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தாலும், அவர்கள் மதுவிற்பனை செய்பவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.