ஐஐடி முன்பு இரண்டாவது நாளாக மாணவர்கள் இன்றும் போராட்டம்.


சென்னை ஐஐடி யில் மாணவர் சூரத் தாக்கப்பட்டதை கண்டித்து இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி விருந்து நடத்தியதற்காக சூரஜ் என்ற மாணவரை சில மாணவர்கள் கடுமையாக தாக்கினர்.
வலதுகண்ணில் பலத்த காயம் அடைந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனீஷ் குமார் உட்பட 8 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் மனீசை தாக்கியதாக சூரஜ் மற்றும் அவரது நண்பர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், இரண்டாவது நாளாக இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக ஐஐடி மாணவர்கள் போராட்டம்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.