ஓசூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான கடை அகற்றம்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அரசு மதுபான கடைக்கு அருகில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான பாரை போலீஸார் அகற்றினர்.
ஒசூர் அண்ணாநகர் தாலுக்கா அலுவலக சாலையில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகளுக்கு அருகே மதுபான பார் ஒன்று கடந்த சில நாட்களாக இயங்கி வந்தது. இந்த பார் அரசின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மதுபான பார் அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பாரை காவல்துறையினர் அங்கிருந்து அகற்றினர். மேலும் இதுதொடர்பாக பார் உர்மையாளர் சுரேஷ் உள்பட இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.