4 நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.


நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறிய 4 நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் 4 நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தனி கட்டணம் நிர்ணயிக்காததால், மாணவர் சேர்க்கைக்கு 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களிடம் 10 லட்சம் ரூபாயை கட்டணமாக சென்டாக்கில் (CENTAC) செலுத்தவும், அதன்படி மாணவர் சேர்க்கையை நடத்தவும் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கட்டண நிர்ணயிக்க குழு அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி, சென்டாக்கில் பணம் கட்டிய 27 மாணவர்களை சேர்க்க ஆறுபடைவீடு, லட்சுமிநாராயணா, விநாயகா மிஷன், மகாத்மா காந்தி நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன், இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பவானி சுப்புராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய 4 நிகர்நிலை பல்கலைக்கழங்களும், சென்டாக் கமிட்டியும் வரும் 3ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.