உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை


உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் எபினேசர் சாமுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் உரிய அனுமதியில்லாமல், போராட்டம், சாலைமறியல் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவைகளும் பாதிப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில், அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை இயக்குநருக்கு அனுப்பிய மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆஜரான அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர், தமிழகத்தில் அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.
இந்த பதிலில், திருப்தி அடையாத நீதிபதிகள், உரிய அனுமதியில்லாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்பட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து வகை போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை டி.ஜி.பிக்கு உத்தரவிட்டார். உரிய அனுமதியின்றி அதிக அளவில் கூடினாலும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்த நீதிபதிகள், சிறுவர், சிறுமிகள், குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துவந்தால், கைது செய்யமாட்டார்கள் என போராட்டக்காரர்கள் கருதுவது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.