ஏழை எளியோருக்கு நீதி கிடைக்க, வழக்கறிஞர்கள் பாடுபடவேண்டும்- இந்திரா பானர்ஜி.


நீதிமன்றங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களுக்கு, விரைந்து நீதி கிடைக்க வழக்கறிஞர்கள் பாடுபடவேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி தடங்கம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை திறைந்து வைத்து பேசிய தலைமை நீதிபதி, பொதுமக்களுக்கு நீதி கிடைக்க நீதிபதிகள் மட்டும் செயல்பட்டால் போதாது எனவும், ஏழை எளியோருக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர்களும் பாடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மகளிருக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தமிழகத்தில் 32 மகளிர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20 மகளிர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.