ஜிஎஸ்டி வரியைக் குறைக்காவிட்டால் திரைப்படத்துறையில் இருந்தே விலகுவேன்- கமலஹாசன்.


சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறைக்கவில்லை எனில், திரைத்துறையை விட்டே விலகப்போவதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் எல்.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய நடிகர் கமலஹாசன், 3 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் தனக்கு சினிமா மட்டுமே தெரியும் என்றார்.
ஹாலிவுட் சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் ஒரே அளவிலான 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு என்பதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், 28 சதவிகித வரிவிதிப்பை குறைக்காவிடில், தாம் திரைத்துறையை விட்டே விலகப்போவதாக நடிகர் கமலஹாசன் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.