‘ஜிசாட்-19’ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் ஜூன் 5-ல் விண்ணில் பாய்கிறது.


இஸ்ரோவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்குகிற ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 5-ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இது 3,136 கிலோ எடையுள்ள ‘ஜிசாட்-19’ தொலைதொடர்பு செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.
பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தி வருகிறது. எடை குறைவான செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி மூலமாகவும், 2 டன் முதல் 2.5 டன் வரையுள்ள செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி மாக் 2 வகை ராக்கெட்கள் மூலமாகவும் விண்ணில் செலுத்தப்பட்டு வந்தன. அதைவிட அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட்கள் மூலம் செலுத்தவேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட்டை உள்நாட்டிலேயே இஸ்ரோ தயாரித்துள்ளது. இதன் முதல் பயணம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜூன் 5-ல் தொடங்குகிறது. இந்த ராக்கெட் 3,136 கிலோ எடையுள்ள ‘ஜிசாட்-19’ செயற்கைக்கோளை சுமந்து செல்லும். ஜிசாட்-19 செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு வகையைச் சேர்ந்தது ஆகும்.
ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட், 4 டன் வரையிலான செயற்கைக் கோள்களை புவிநிலைச் சுற்றுப்பாதையில் (GeoSynchronous Orbit) நிலைநிறுத்தும் திறன் கொண்டது. 10 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களை பூமியின் தாழ்வட்டப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்தும்.
இந்த முதல் முயற்சி வெற்றிபெற்றால், 4 டன்கள் கொண்ட செயற்கைக்கோளை ஏவ இனி ஏரியன் ராக்கெட்டை நம்பியிருக்கத் தேவையில்லை. வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும் வர்த்தகரீதியாக விண்ணுக்கு அனுப்ப முடியும். இதன்மூலம் செலவு குறைவதுடன், வருவாய் அதிகரிக்கும்.
மனிதனை அனுப்பும் முயற்சி
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா முயன்று வருகிறது. அதற்கான விண்கலன், விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் தொழில் நுட்பத்தை இஸ்ரோ ஏற்கெனவே வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. மனிதனை விண்ணுக்கு கொண்டுசெல்லும் விண்கலன் சுமார் 8 டன் எடை கொண்டது. ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் பயணம் வெற்றிபெற்றால், மனி தனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியிலும் முன்னேற்றம் உண்டாகும். எனவே, இந்த ராக்கெட் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 43.43 மீட்டர் உயரம், 640 டன் எடை (எரிபொருளுடன் சேர்த்து) கொண்ட ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் ஜூன் 
5-ம் தேதி மாலை 5.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.