தங்கத்தின் மீதான ஜி.எஸ்.டி. வரி நிர்ணயம் குறித்து இன்று ஆலோசனை.


டெல்லியில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. ஆலோசனைக் கூட்டத்தில், தங்கத்தின் மீதான வரி நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக நிர்ணயிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்று டெல்லியில் கூடும் ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் 32 மாநிலங்களின் அமைச்சர்கள் கூடி ஆலோசனை மேற்கொள்கின்றனர். இக்கூட்டத்தில் இன்று தங்கத்தின் மீதான வரிவிதிப்பு முடிவு செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் தங்க நகை விற்பனை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜி.எஸ்.டி. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.